• Download mobile app
22 Feb 2025, SaturdayEdition - 3300
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பீளமேடு பகுதியில் ஜெகன்நாத் பிராப்பர்ட்டீஸ் வழங்கும் வேதாந்தா பிரீமியம் அபார்ட்மென்ட் அறிமுக விழா

February 21, 2025 தண்டோரா குழு

பிரபல ஜெகன்நாத் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் பீளமேடு பகுதியில் புதிதாக ‘வேதாந்தா’ எனும் பிரீமியம் அபார்ட்மென்ட் கட்டுவதற்கான பணிகள் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை நகரின் முக்கிய பகுதியான அவினாசி சாலை, பீளமேடு பகுதியில் பிரபல முன்னனி ஜெகந்நாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது புதிய புராஜக்டாக வேதாந்தா அபார்ட்மென்ட் அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கான பணிகளை துவக்கி உள்ளது.1,2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட 290 ஃபிளாட்டுகளை உள்ளடக்கிய இந்த அடுக்குமாடி குடியிருப்பின் அறிமுக விழா 21 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான துவக்க விழாவில் ஜெகந்நாத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் குமார் டைபர் வால்,ஜகந்நாத் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்கு தாரர்கள் சதீஷ் மிட்டல்,கோபால் மஸ்காரா,அனுராக் டைபர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை நகரின் முக்கிய பகுதியில் அமைய உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே,டைடல் பார்க், பிரபல கல்லூரிகள், பள்ளிகள்,மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு 1 படுக்கையறை கொண்ட ஃபிளாட் ரூ.37.7 லட்சம் முதல்,2 படுக்கையறைகள் கொண்ட ஃபிளாட் ரூ.51.4 லட்சம் முதல் மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட ஃபிளாட் ரூ.90.5 லட்சம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.அறிமுக விழா சிறப்பு சலுகையாக முதலில் முன்பதிவு செய்யும் 30 நபர்களுக்கு சிறப்பு சலுகை விலை வழங்கப்பட உள்ளதாக பங்குதாதரர்கள் தெரிவித்தனர்.

புதுமையான டெரஸ் பிளாசா வசதியுடன் டெரஸ் ஜிம், பார்பெக்யூ நூக், கெட்-டுகெதர் ஏரியா டிரெல்லிஸ் வாக்வே, ஓப்பன் தியேட்டர் மற்றும் சீட்டிங் டாக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ராக் கிளைம்பிங் வால், நடைபயிற்சி பாதை, யோகா டெக், டிராம்போலின், பாசென்ஜர் மற்றும் சர்வீஸ் லிஃப்ட் ஸ்மார்ட் டோர் லாக், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் சி.சி.டி.வி கேமரா, தீயணைப்பு அமைப்பு, 24 மணி நேர செக்யூரிட்டி உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் ஜெகன்நாத் வேதாந்தா அபார்ட்மென்டில் இடம்பெற உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க