• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பீளமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா

May 17, 2023 தண்டோரா குழு

கோவை பீளமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ந்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனையுடன், தினமும் காலை, மாலை என இருவேளையும் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைப்பு,பீளமேடு புதூர், மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோவிலில் இருந்து பக்தர்கள் பூவோடு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக பீளமேடு ஸ்ரீபட்டாளம்மன் கோவில் வந்தடைந்தனர். இதில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தும் விதமாக அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.

தொடர்ந்து,திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன்,அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் வசந்த பூஜையுடன் விழா நிறைவுபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் தலைவர் மகேந்திரன் துணைத் தலைவர் கிருஷ்ணன் செயலாளர் தர்மராஜ் துணை செயலாளர் தாமு பொருளாளர் ஆர் பி எஸ் முருகேசன் துணை பொருளாளர் சிவ கணேஷ் மற்றும் நிர்வாகிகள் சின்னச்சாமி நாகராஜ் உலகராஜ் சுந்தரம் சந்திரன் தேவராஜ் சிவசாமி மருதாச்சலம் காலனி ரவி, ஆர்.பி.எஸ் ரகுநாத் சதீஷ் கோகுல் உட்பட பலர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க