September 27, 2024 தண்டோரா குழு
கோவை புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் வித்யா உத்சவ் 2024 எனும் கல்வி கண்காட்சியை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கோவையில் உள்ள புரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் வித்யா உத்சவ் 2024 கண்காட்சி துவங்கியது. காலாண்டு விடுமுறை துவங்கி உள்ள நிலையில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கோவையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பான கூடுதல் தகவல்களை தரும் விதமாக இந்த கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27 ந்தேதி துவங்கி செப்டம்பர் 29 ந்தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இது குறித்து புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தின் தலைமை செயல் அதிகாரி அஷ்வின் பாலசுப்ரமணியம்,மற்றும் மார்க்கெட்டிங் ஹெட் சுஜாதா ஆகியோர் கூறுகையில்,
14 ஆண்டுகளுக்கும் மேலாக, புரூக்ஃபீல்ட்ஸ் சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும், பல்வேறு நிகழ்வுகள் மூலம் கோவையின் வளமான கலாச்சாரத்தைக் கொண்டாடி வருவதாகவும்,
இந்த வித்யா உத்சவ் துவங்கியதன் நோக்கம், பெற்றோர்கள் புதுமையான கற்றல் வாய்ப்புகளை ஆராயவும், உள்ளூர் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் புதிய முறைகளை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த புரூக்ஃபீல்ட்ஸ் வித்யா உத்சவ் கண்காட்சியில் கோவையில் உள்ள முன்னனி கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர்.
மேலும்,குழந்தைகளுக்கான எழுதுபொருட்கள்,புத்தகங்கள் மற்றும் பேஷன் ஆடை அணிகலண்களுக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.