September 15, 2024 தண்டோரா குழு
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று 15ந் தேதி கொண்டப்பட்டது.
இந்நிலையில், கோவையில் அமைந்துள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் ஓட்டலில் ஓணம் பண்டிகையொட்டி சிறப்பு போச்சே ஓணம் விருந்து என்ற உணவு திருவிழா நடைபெற்றது.
இதில் சிறப்பம்சமாக 22 வகையான ஓணம் சத்யா உணவு பரிமாறப்பட்டது.இந்த விருந்தில் பாரம்பரிய உடை அணிந்து 22 வகையான உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு இலவசமாக தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து 200க்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்தனர்.
பின்னர் இன்று மதியம் 12:30 மணியளவில் துவங்கிய போச்சு ஓணம் விருந்தில் முன்பதிவு செய்த அனைவரும் கலந்து கொண்டு 22 வகையான உணவுகளை உட்கொண்டனர்.இதில் 22 வகையான உணவுகளையும் முழுமையாக குறைந்த நேரத்தில் சாப்பிட்ட நபர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
முதல் பரிசினை டினோ – எஸ்தர் ஜோடியும், இரண்டாம் பரிசினை வினித் ஜோடியும் பெற்றது. மேலும் இந்த உணவு விருந்தில் கலந்து கொண்ட நபர்கள் தங்களது செல்ஃபி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதிக பார்வை கொண்ட புகைப்படத்திற்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதில்,சிறந்த புகைப்பட பார்வைக்காக பாதுஷா – நேகா என்ற ஜோடிக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது.
போச்சே உணவு திருவிழா நடைபெறுவதை ஒட்டி ஹோட்டல் முழுவதும் ஓணம் பண்டிகைக்கான பூக்கோலம், மாபலி வேடம் அணிந்த மன்னர் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் ஓணம் பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர்.