July 31, 2017 தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட 60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார்.
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், முனியப்பன் இன்று காலை சாலையில் செல்லும் போது ,முன்னே சென்ற இரு சக்கரவாகனத்தில் இருந்து பை ஒன்று தவறி விழுந்ததுள்ளது.
அதை முனியப்பன் எடுத்து பார்த்த போது அதற்குள் தங்கநகைகள் மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சக ஆட்டோ ஓட்டுநர்களிடன் கூறி,அந்த பையை மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்தார். பையுக்குள் இருந்த நகையை மதிப்பீடு செய்த போது 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்
இதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆனையர் அலுவலகத்திற்கு வரவழைத்த கோவை மாநாகர காவல் ஆனையாளர் அமல்ராஜ் பழனிச்சாமி தொலைத்த நகைகளுக்கான அடையாளங்களை கேட்டுள்ளார். இதில், முனியப்பன் ஒப்படைத்த நகைகளும் இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகரகாவல் ஆணையாளர் அமல்ராஜ் , அவரது நேர்மையை பாராட்டி தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் கோவை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.