November 3, 2022 தண்டோரா குழு
கோவை மணியகாரபாளையம் கேம் போர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் 13வது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு கேம் போர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் தாளாளர்பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி பி ஏ நிறுவனங்கள் தலைவர் டாக்டர் பி அப்புகுட்டி கலந்து கொண்டு நடந்து முடிந்த பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
கேம் போர்டு இன்டர்நேஷனல் பள்ளியின்மாணவர்கள் புதிய பரிமாணங்களை கண்டறிய ஆர்வமாக உள்ளதை இங்கு காண முடிகிறது இது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இந்தியாவில் கல்வி தரத்தைஉயர்த்த மத்திய மாநில அரசுகள்கொண்டுவர முயற்சித்து வருகிறது.தற்போதைய உள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று எடுத்துக் கூறுகிறார்கள்அதற்குத் தகுந்தாற்போல ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும்.
மாணவர்கள் மதிப்பெண்கள் மட்டும் என்று இல்லாமல்பல்வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.திறமையான மாணவர்களை கண்டறிந்து அவர்கள் விரும்பும் துறையில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் முற்பட வேண்டும் திறமையான ஆசிரியர்கள் இருந்தால்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் தங்க மெடல் பெற்ற மாணவர்கள் கூட பிற்காலத்தில் சிறந்த ஆசிரியர்களாக உருவாகி உள்ளனர்.
மாணவர்கள் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும் பின்லாந்து நாடு கல்வித் துறையில் உலகில் சிறந்து விளங்குகிறது அங்குஆசிரியர்கள் பயிற்சியில் தேர்வு வர ஆறு ஆண்டுகள் பயிற்சி முடித்து வர வேண்டும்.திறமையான ஆசிரியரானால் தான்சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என கூறினார்.
விழாவில் பள்ளியின் மாணவ மாணவிகளின் நடனம் நாடகம் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை பூனம் சியால் நன்றி கூறினார்.