• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம்

May 28, 2022 தண்டோரா குழு

தினமும் பத்துக்கும் மேற்பட்ட‌ நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள்.

கோவை மருதமலையில் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இக்கோவில் அதிகாலை 6 மணி முதல் நடை திறக்கப்பட்டு இரவு ஏழு முப்பது மணி வரை கோவில் இயங்கி வருகிறது. மலை மற்றும் அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது.மருதமலை கோவிலை ஒட்டிய மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இவர்கள் வளர்த்துவரும் நாய்கள் கடந்த சில தினங்களாக மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளது.

இதுகுறித்து கோவில் மற்றும் மலைவாழ் மக்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அதிகாலை 5 மணி அளவில் சிறுத்தைப்புலி ஒன்று தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் வருவது பதிவாகி இருந்தது.

இந்த சிசிடிவி காட்சி எனவே கோவில் ஊழியர்கள்,மலைவாழ்மக்கள் உள்ளிட்டோருக்கு மிக வேகமாக பரவி அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க