• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மருதம் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு 30% தள்ளுபடி விற்பனை துவக்கம்

September 25, 2024 தண்டோரா குழு

கோவை மருதம் கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு 30% தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்.

கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.தீபாவளி 2024″சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்கள் அனைத்து விற்பனை நிலையங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி 2024″சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கு விரிப்புகள், வேட்டிகள், தலையணை உறைகள், லுங்கிகள், துண்டு ரகங்கள்ஆடவர் அணியும் ஆயுத்த சட்டைகள்,மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமான விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது.காஞ்சிபுரம்,சேலம்,கோவை,ஆரணி,தஞ்சை போன்ற பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க