January 17, 2018 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அறிவித்த வரைவு வார்டு மறு வரையறையில் இருக்கும் குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் மனு அளித்தார்.
அதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் வரி விதிக்கப்படாத குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மாநகராட்சியில் 70 சதவீத வீடுகளில் ஒரே வரி விதிப்பின் கீழ் சுமார் 3 அல்லது 4 குடியிருப்புகளுக்கு மேலாக வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். வரி விதிப்பு மட்டும் கணக்கில் எடுக்கும்போது வாக்காளர் பட்டியலில் உள்ள மற்றவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சில வார்டுகளை இரண்டாக பிரித்து, வெவ்வேறு சட்டமன்ற தொகுதியில் சேர்த்துள்ளனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, பரிசீலனை செய்தி முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை மாநகராட்சி ஆணையாளரிடத்தில், நா.கார்த்திக் எம்எல்ஏ வழங்கினார்.