• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

March 28, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. வீடுகளில் குடிநீருக்காக தேக்கி வைக்கப்படும் டிரம்கள் போன்றவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து தண்ணீர் தேங்குவதை கண்காணித்து அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகுவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வீடு, வீடாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு புழுக்கள் வீட்டில் உபயோகிக்கும் தண்ணீர் டிரம்களில் உள்ளதா? வீட்டின் மேல்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அருகில் நீர் தேங்கியுள்ளதா? என ஆய்வு நடத்தி டெங்கு கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதவிர வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்படுகிறது’’ என்றார்.

இதனிடையே தண்ணீர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 1500க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகளில் குளோரின் மாத்திரைகள் கலப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

மேலும் படிக்க