• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

March 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 22 சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வார்டுகள் பிரித்து தரப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் உள்ள 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டுகளை கவனித்து வந்த சுகாதார ஆய்வாளர் தனபாலன் தற்போது மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 81, 82, 83, 84 ஆகிய வார்டுகளை கவனிக்க நியமிக்கப்பட்டு உள்ளார்.

தனபாலன் கவனித்து வந்த மேற்கு மண்டலத்திற்கு சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.மேற்கு மண்டலத்தில் சந்திரசேகரன் கவனித்து வந்த 10, 11, 12, 22, 23, 24 ஆகிய வார்டுகளை, மத்திய மண்டல சுகாதார ஆய்வாளராக சலேத் கவனிப்பார்.

கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதி தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடத்தில் உடனடியாக சேருமாறும், கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க