January 17, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 30 சாலைகளில் வாகனம் நிறுத்த கட்டணம் விதிக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையோரப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் ( On Street Parking ) அமைக்கும் பொருட்டு 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கின்ற தனியார் நிறுவனங்கள் மூலம் 5 வருட காலங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் நிறுத்துமிடங்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தும் இதே போல் மாநகராட்சிப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் வாகன நிறுத்தும் இடங்களில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஒருமணி நேரத்திற்கும் மற்றும் மாத வாடகை கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது.
வாகன இது தொடர்பாக தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கென ( On Street Parking and Off Street Parking ) நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்ததாரர் மூலம் வசூலிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.