November 17, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன.இதில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் 2500க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.கோவை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக தூய்மைப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இதனிடையே கோவை மாநகராட்சியில் சினியரிட்டி அடைப்படையில் 34 தூய்மைப்பணியாளர்களுக்கும்,பதிவுறு எழுத்தர்கள் அடிப்படையில் 12 தூய்மைப்பணியாளர்களுக்கும் என மொத்தம் 46 தூய்மைப்பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 83 தூய்மைப்பணியாளர்கள் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பிறப்பித்துள்ளார்.