• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி செயல்படாத மாநகராட்சியாக உள்ளது- எஸ்.பி.வேலுமணி

May 2, 2022 தண்டோரா குழு

கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் வெளியேவர அச்சப்படும் சூழ்னிலை ஏற்பட்டுள்ளது. இதைபற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அரசு விளம்பரம் செய்வதிலேயே உள்ளது என்று கோவையில் செய்தியாளர்களிடம் அதிமுக கொரடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள “நூருல் இஸ்லாம் அனபி சுன்னத் ஜமாத்” பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்து நிகழ்ச்சி அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எஸ்பி வேலுமணி இஸ்லாமிய சகோதரர்களுடன் அமர்ந்து நல்லினக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக நோன்பு கஞ்சி அருந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் அதிமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்த சிடிசி ஜபார்,மேட்டுப்பாளையம் நாசர் உட்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி. கழகம் சார்பாக அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். புனித ஹஜ் யாத்திரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தபோதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் , அரசு 6 கோடியை மானியமாக வழங்கியது.

கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நிகழ்ச்சியில் எடப்பாடி 6 கோடியை 10 கோடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார், மேலும் நாகூர் தர்காபள்ளி வாசல் மதில் சுவர் புனரமைப்பு பணிக்கு 5.40 கோடி ஒதுக்கி பணிகளை செய்து முடித்தது மாண்புமிகு அம்மாவின் அரசு என்று தெரிவித்தார். மேலும் புனித ஹஜ் யாத்திரைக்கு 14 கோடி நிதி ஒதுக்கி தந்ததும் அண்ணன் எடப்பாடியார் ஆட்சியில்தான் உலமாக்களுக்கு இலவச மிதிவண்டி அறிவித்தது.

ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்ததும் அதிமுக ஆட்சியில்தான்மேலும் நோன்பு கஞ்சிக்கு 3000 பள்ளி வாசலுக்கு 5145 டன் அரிசு வழங்கியது அம்மாவின் அரசு சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பான் அரசாக இருப்பது மாண்புமிகு அம்மாவின் அரசு தற்பொழுது மின்விட்டு, சாலை பிரச்சனை கடந்த ஆண்டு சீராக இருந்தது. தற்போது மாநகராட்சி 300 சாலைகள், 200 புறநகர் சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர்களும், அதிகாரிகளும் ஏன் இப்படி உள்ளனர். கோவையை புறக்கனிக்கிறார்களா.
மக்கள் வரி செலுத்துகிறார்கள், அவர்களுக்கான பணிகளை அதிகாரிகள் நடுநிலையுடன் செய்யுங்கள், வெகு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி நல்ல திட்டம் 100 ல், 11 தமிழகத்திற்காக அன்றய முதல்வர் அம்மா பெற்றுதந்தார் அதில் கோவையும் ஒன்று, பொழுதுபோக்கிற்காக நன்றாக பணிகளை செய்து முடித்துள்ளோம் இந்த அரசு முறைபடுத்தவில்லை, தற்பொழுது குப்பைகளும், டைல்ஸ்கள் உடைஅட்டும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

கோவை மாநகராட்சி செயல்படாத மாநகராட்சியாக உள்ளது.தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுக்கம் பாதிக்கப்பட்டதுள்ளது.திமுக அரசு விளம்பரத்தில் தான் இந்த அரசு ஓடுகிறது. விலைவாசி அதிகரித்துள்ளது, அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று அந்த பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் படிக்க