October 4, 2022 தண்டோரா குழு
ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில் ஈடுபட்ட 2,000 தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம்
மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தூய்மைப்பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.
தூய்மைப்பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து வருகின்ற மாமன்ற நாட்களில் மாமன்றத்தில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தற்போது போராட்டம் தொடர்பாக கொடுக்கப்பட்ட காரணம் கேட்கும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வன் , பொது சுகாதார குழுத் தலைவர் மாரிசெல்வன் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் .