March 31, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கோவை மாநகராட்சியில் மூன்று அதிமுக கவுன்சிலர்கள் உள்ளனர். பிரபாகரன், ரமேஷ் மற்றும் ஷர்மிளா சந்திரசேகர். கோவை மாநகராட்சியின் பட்ஜெட் புத்தகத்தை மேயர் மேசையில் திருப்பி தந்து விட்டு அவர்கள் பட்ஜெட் சிறப்பு கூட்டத்திலிருந்து வெளியேறினார்கள்வெளியேறும்போது இது வெற்று காகித பட்ஜெட், கடந்த ஆண்டு அறிவிப்புகள் தான் இதிலும் உள்ளது என கோஷங்மிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்கள் இது கடந்தாண்டு பட்ஜெட் தாக்களில் என்ன சொல்லி உள்ளார்களோ அதையே தான் இந்தாண்டும் சொல்லி உள்ளார்கள். புதிதாக எதுவும் சொல்லவில்லை. மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டங்கள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இந்த ஆண்டு ரூ.700 கோடி வருவாய் அதிகமாக வந்துள்ளது. மக்களிடம் திணித்து சொத்து வரி அதிகப்படுத்தி இந்த வருவாய் வாங்கி உள்ளனர்.
இவ்ளோ பெரிய நகரமான கோவைக்கு எந்த திட்டமும் உருப்படியாக இல்லை. பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. அதிமுகவை பொருத்தவரை இந்த பட்ஜெட் என்பது சர்க்கரை என்று பேப்பரில் எழுதினால் இனிக்காது மக்களுக்கு உதவாத வெற்று காகித பட்ஜெட். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.