• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பட்ஜெட்: வருவாய் ரூ.3018 கோடி, செலவு ரூ. 3029 கோடி : பற்றாக்குறை ரூ.10 கோடி

March 31, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார்.

இதில் 2023-24ம் நிதியாண்டில் வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ.3018.90 கோடி எனவும், வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் மொத்தம் ரூ. 3029.07 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2023-24ம் நிதியாண்டில் நிகரப்பற்றாக்குறை ரூ.10.17 கோடி ஆகும்.

இந்த பட்ஜெட் தாக்கலின் போது மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், துணை மேயர் ஷர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:

408.77 கி.மீ நீள சாலைகள் ரூ. 215.57 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளன.

மாநகர சாலைகள்: கோவை மாநகரில் 2,240 கி.மீ நீளம் தார்சாலை, 243.67 கி.மீ நீளம் சிமெண்ட் சாலை, 16.68 நீளம் கற்சாலைகள், 114 கி.மீ நீளம் மண் சாலைகள் உள்ளன. இதில் பழுதடைந்த 51.43 கி.மீ சாலைகள் ரூ.34.93 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. 118.66 கி.மீ நீள சாலைகள் ரூ.80.47 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் வரும் நிதியாண்டில் 290.11 கி.மீ சாலைகள் ரூ.135.10 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால் மாநகரில் உள்ள மொத்த பழுதடைந்த 408.77 கி.மீ நீள சாலைகள் ரூ. 215.57 கோடி மதிப்பீட்டில் வரும் நிதியாண்டில் சீரமைக்கப்பட்ட உள்ளது.

கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள்

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த இந்த நிதி ஆண்டில் தேவைக்கேற்ப ரூ. 25 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளும், கூடுதல் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல்

மாநகராட்சியில் உள்ள 17 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 10 உயர்நிலைப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ. 50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் ஒரு கோடி மதிப்பில் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மேலும் ரூ. 1 கோடி மதிப்பில் பள்ளிகளுக்கு புதிய மேஜை மட்டும் நாற்காலிகள் வாங்குதல், அதேபோல் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கணினிகள் வாங்குதல் மற்றும் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மெய் நிகர் தொழில்நுட்பம் மாநகராட்சி மேல்நிலை மட்டும் உயர்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்துதல், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மக்களை தேடி நூலகம், மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்குதல், மேலும் மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கு ரூ. 5000 ஊக்க தொகையாக வழங்ககுதல் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள்:

அனைத்து மாநகராட்சி உயர்நிலை மட்டும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

குடிநீர் விநியோகம் :

சீரான குடிநீர் வழங்குவதற்காக பவானி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் மூன்று திட்டம் ரூ 779.86 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மிதவை சூரிய சக்தி மின்கலம் திட்டம்:

புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் முறைகளை கண்டறிந்து மின்சாரம் தயாரிக்கும் பணிகள் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் சக்தி திட்டங்களின் வாயிலாக 2.41 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மூலம் ரூ. 16.93 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உக்கடம் குளத்தில் மிதவை சூரிய மின்சக்தி மின்கலன் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியிலே முதல்முறையாக கோவை மாநகராட்சியில் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நிதி ஆண்டில் தொடங்கப்படும்.

மேயர் விருப்ப நிதி:

மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும் மேயர் கள ஆய்வின் போதும் தெரிவிக்கப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மேயர் விருப்ப நிதி இந்த நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு திட்டம்:

மாமன்ற உறுப்பினர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள மக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே அதனை நிறைவேற்றும் வண்ணம் மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கூகுள் பே, போன் பே, கியூ ஆர் கோர்டு போன்றவைகள் மூலம் வரி வசூல் செய்தல்

கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களில் தல ஒரு வரி வசூல் மையமும், வார்டு பகுதிகளில் 22 வரி வசூல் மையங்களும் என மொத்தம் 29 வரி வசூல் மையங்கள் மூலம் ரொக்கம், காசோலை, வங்கி வரைவோலை, கிரெடிட் கார்டு டெபிட் கார்டு ஆகிய முறைகளிலும் மற்றும் ஸ்வைப் எந்திரம், நெட் பேங்கிங் போன்றவர்களின் மூலமும், இணையதளம் வாயிலாகவும் வரி இனங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வரி செலுத்துவதில் மேலும் கூடுதல் வசதிகள் அளிக்கும் பொருட்டு கைபேசி கியூ ஆர் கோர்டு, ஸ்கேனிங், கூகுள் பே, போன் பே முதலிய செயலிகள் மூலம் இப் பணிகள் செய்வதற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சந்தைகள் மேம்பாடு

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சந்தை வளாகம் ரூ. 3.15 கோடி மதிப்பீட்டிலும், அண்ணா சந்தை வளாகம் ரூ. 4.19 கோடி மதிப்பீட்டிலும், சுந்தராபுரம் தக்காளி சந்தை வளாகம் ரூ. 73 லட்சம் மதிப்பீட்டிலும் நவீன வளாங்களாக மாற்றியமைக்கப்படும். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பொதுமக்களும் 4 ஆயிரம் வியாபாரிகளும் பயன்பெறுவார்கள்.

பாதாள சாக்கடை திட்டம்

வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.935. 92 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவுற்றவுடன் 67,545 வீட்டு இணைப்புகள் வழங்கப்படும்.இத் திட்டத்தினால் 4 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அதே போல் சரவணம்பட்டி, வெள்ளை கிணறு சின்னவேடம்பட்டி ஆகிய இணைக்கப்பட்ட பகுதிகளின் 9 வார்டுகளுக்கு ரூ. 357.88 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் தொடங்க தொழில்நுட்ப அனுமதி பெரும் நடவடிக்கையில் உள்ளது. திட்டத்தின் முடிவில் 22,943 வீட்டிக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரத்து 815 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அம்ரூத் 2.0 திட்டம் இரண்டின் கீழ் ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளுக்கு ரூ. 187.47 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டம் தொடங்க தொழில்நுட்ப அனுமதி பெரும் நடவடிக்கை உள்ளது. திட்டத்தின் மூலம் 33,804 வீட்டினைப்புகள் வழங்கப்பட்டு சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவர்.

பயோ கேஸ்

வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் 100 டன் உலர் மற்றும் ஈரக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயோ கேஸ் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு ரூ. 37.83 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை நிர்வாகம் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சுகாதார நிலையங்கள் மேம்பாடு

கோவை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான பிரசவத்திற்காக மருத்துவ உபகரண கருவிகள் 25 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

பேருந்து நிலையங்கள், சந்தைகள், ஸ்மார்ட் சிட்டி குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் குற்றங்களை தவிர்க்கவும், பாதுகாப்பிற்காகவும் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும். இப்பணிகள் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மின்னணு சார்ஜிங் நிலையங்கள்

பெருகிவரும் மின்னணு வாகனங்களால் பல நன்மைகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படுகிறது. இதனை இன்னும் அதிகரிக்க வேண்டுமானால் சார்ஜிங் நிலையங்கள் மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு நகரில் 20 இடங்களில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தனியார் நிறுவனங்கள் மூலம் நிறுவப்படும்.

அறிவியல் பூங்கா, கணித பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா

கோவை மாநகராட்சிக்குட்பட்ட டாடாபாத் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த அறிவியல் பூங்காவை ரு.50 லட்சம் மதிப்பீடு சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் மாணவர்கள் கணிதத்தை எளிதாக செய்முறை மூலம் கற்கும் விதமாக வ.உ.சி பூங்கா வாளகத்தில் கணிதமேதை ராமானுஜர் பெயரில் ராமானுஜம் கணித பூங்கா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். குமாரசாமி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இக்குளக்கரையில் குழந்தைகளை கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைப்பதற்கான சாதி கூறுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த நிதி ஆண்டில் கோவை மாவட்டத்திலேயே முதல் முறையாக வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்படும்.

நம்பிக்கை பூங்கா

மாநகரில் முதல்முறையாக அனைத்துதரப்பு மக்களும் அடங்கும் விதமாக பூங்கா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டோருக்கான பல்வேறு வசதிகள் இப்பூங்காவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பூங்கா சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

மேலும் படிக்க