October 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவ, மாணவிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக மாநகராட்சி பள்ளிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்திப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் மற்றும் பிற உடல் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிய சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மாநகராட்சி பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் சார்பில் நாள்தோறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனைக்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.