• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றம்

May 27, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் இரண்டாவது மாமன்ற கூட்டம் நேற்று மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச்செல்வன் துணை கமிஷனர் ஷர்மிளா ஆகியோர் கூட்டத்தில் முன்னிலை வகித்தார்கள். இதில் 64 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது 72வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் கூட்டத்தில் தீர்மானங்கள் விவாதிக்க வேண்டியது தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கவுன்சிலர்களுக்கு அது தொடர்பான விவரம் வழங்கப்பட வேண்டும். இது குறித்து தெளிவாக படித்து தெரிந்து பிறகு தான் அது குறித்து விவாதிக்க முடியும். ஆனால் 24 மணி நேரம் முன்பாக தான் பலருக்கும் இங்கேயே தீர்மான விவரம் வழங்கப்பட்டுள்ளது. இதை படித்து தெரிந்து விவாதிப்பது என்பது தற்போது சாத்தியம் இல்லாதது எனவே இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் அல்லது இதில் 13 பொருட்களை அதாவது தீர்மானங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இவரது கருத்துக்கு ஆதரவாக காங்கிரசை சேர்ந்த 71 வது வார்டு கவுன்சிலர் அழகு ஜெயபாலன், 64 வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயபிரதா தேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் 12வது வார்டு ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 41 வது வார்டு கவுன்சிலர் சாந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பல கவுன்சிலர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தியனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் அனைத்து பொருட்களுமே பல்வேறு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர்தான் தீர்மானத்துக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த கூட்டத்தில் முன்னதாகவே வழங்கப்படும். தற்போது கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். பின்னர் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோர் கூட்டத்தை தொடர்ந்து நடத்தலாம் என்றனர்.

பின்னர் தீர்மானங்கள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தாமதமாக நடக்கிறது. சாலை போடும் பணிகள் மிகவும் மந்த நிலையில் நடக்கிறது இதை உடனே விரைவுப்படுத்த வேண்டும் என்றனர்.

இதற்கு பதலளித்து பேசிய துணை கமிஷனர் கோவை மக்களின் அவசர தேவை கருதி ரூ. 4.12 கோடிக்கு சாலை சீரமைப்பு பணிகள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் மக்களிடம் மக்கள் சபை மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளுக்கு 169 கோடி நிதி ஒதுக்குவது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது விரைவில் அதற்கான நிதி பெறப்பட்டு 456 இடங்களில் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.

100 வது வார்டு திமுக கவுன்சிலர் கார்த்திக்கேயன் பேசுகையில்,

கட்டிடங்கள் கட்டுவதற்கு அப்ரூவல் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக 2000 ஸ்கொயர் பீட் அளவில் உள்ள கட்டிடப் பணிகளுக்கு பொருள் வாங்குவது மிகவும் சிரமமாக அதை எளிமைப்படுத்திட வேண்டும். பாதாள சாக்கடை பணிகள் காரணமாக செட்டிபாளையம் சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது கண்டிப்பாக மேயர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அதை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் உடனடியாக அதனை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில்,

மாநகராட்சியில் தண்ணீர் பிரச்சினை மிகவும் அதிகமாக உள்ளது. 6 நாட்களுக்கு ஒருமுறை, 8 நாட்களுக்கு ஒரு முறை, 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இதை உடனடியாக தீர்க்க வேண்டும். அதிகாரிகள் உடைய சீனியர் ஜூனியர் பிரச்சனை காரணமாக குடிநீர் விநியோகம் என்பது மிகவும் பிரச்சினையாக உள்ளது. சீனியர் அதிகாரிகள் ஜூனியர் அதிகாரிகளை மிரட்டி தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாரங்களுக்கு முன்னதாகவே குடிநீர் வினியோகம் செய்கின்றனர். இதனால் சில வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சூயஸ் நிறுவனத்தினர் என்றும் நமக்கு கட்டுப்படுத்த தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு கட்டுப்பட்டு நாம் இருக்கக் கூடாது. மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டோம். பேருந்து நிலையங்களில் பயணிகள் அமரும் இருக்கை போன்ற பல்வேறு இடங்களில் சிலர் அசுத்தம் செய்து வைத்திருந்தனர். அதனை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வரை பேருந்து நிலையங்கள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எனது கோரிக்கை என்னவென்றால் இதுபோன்ற மாநகரின் முக்கியமான பேருந்து நிலையங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். அந்த கேமராக்கள் மூலம் அசுத்தம் அசுத்தம் செய்பவர்களை கண்காணிக்க வேண்டும். கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் அசுத்தம் செய்கிறார்களோ அவர்களை கண்டறிந்து உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்ய வைக்கவேண்டும். அபராதம் போடுவதை விட இந்த தண்டனை என்பது சிறப்பாக இருக்கும்.

மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள், காலி இடங்களில் புதர்மண்டி உள்ளது. அதே போல் தனியார் பலரும் பார்க்கிங் ஆக அந்த இடங்களை உபயோக படுத்தி வருகின்றனர். எனவே அந்த இடங்களை கண்டறிந்து நாம் வருவாய்க்கு ஏற்ற வாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.பிளாஸ்டிக் கவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை முழுமையாக கோவை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக நான் மஞ்சப்பை கொண்டு வந்துள்ளேன் என்றார்.

கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில்,

கோவை திருச்சி சாலையில் மாநகராட்சி நிர்வாகம் போதிய கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அவினாசி சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை போலவே திருச்சி சாலையில் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். கட்டிடக்கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகள் திருச்சி சாலை ஓரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை கண்டறிந்து மேயர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். அபராதம் விதிப்பு கடுமையாக்கப்பட வேண்டும்.

கிழக்க மண்டலத்திற்கு உதவி நகரமைப்பு அலுவலர் தனியாக நியமிக்க வேண்டும். தற்போது உள்ள உதவி நகரமைப்பு அலுவலர் பெரும்பாலும் கிழக்கு மண்டலத்தில் இருப்பது இல்லை.

வீடடற்ற நாய்கள் கணக்கெடுப்பு தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் கணக்கெடுப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு பணிகள் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இது போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மாநகராட்சி வாகனங்கள் எப்.சி.காட்டும் போது மட்டுமே வாட்டர் வாஸ் செய்யப்படுகிறது. வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். சிறிய அளவிலான கட்டுமான பணிகளுக்கான அப்ரூவலை மண்டல அளவிலே முடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனால் மாநகராட்சி அலுவலகத்துக்கு மக்கள் அலைவது தவிர்க்கப்படும், என்றார்.

வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பேசுகையில், மாநகராட்சியில் பயன்படுத்தப்படாமல் உள்ள பர்னிச்சர்கள், வாகனங்கள் போன்றவைகள் ஸ்கிராப்பில் போட வேண்டும். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும், என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய துணை கமிஷனர் ஷர்மிளா, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் அலுவலகங்கள் போன்றவற்றில் உள்ள பர்னிச்சர்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படாமல் உள்ள அனைத்து பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் மூலம் அது ஸ்கிராப்பில் போடப்படும், என்றார்.

பின்னர் வடக்கு மண்டல தலைவர் பேசுகையில், மாநகராட்சி டெண்டர்களில் எப்.ஐ.ஆர். போடப்பட்ட சில நிறுவனங்கள் பங்கேற்று பணிகள் மேற்கொள்கிறது. இது போன்ற நிறுவனங்கள் டெண்டர்களில் பங்கேற்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், என்றார்.

மேற்கு மண்டல தலைவர் தெய்வ யானை தமிழ்மறை பேசுகையில், ரிசர்வ் சைட்டில் பலர் முறைகேடாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் ரிசர்வ் சைட்டில் இது போன்ற கட்டுமானங்கள் நடைபெறுவது தடுக்கப்படும், என்றார்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி பேசுகையில், துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி போன்ற பகுதிகளில் அம்ரூட் திட்டம் தொடர்பாக சாலைகள் தோண்டப்படுகிறது. அனால் பெரும்பாலும் சீரமைக்கப்படுவது என்பது பேட்ச் ஒர்க் மட்டுமே செய்யப்படுகிறது. சாலைகளை முறையாக சீரமைக்க வேண்டும். கவுன்சிலர்களுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். மாநகராட்சியில் ஒரு அமர்வுக்கு கவுன்சிலிர்களுக்கு ரூபாய் 800 தரப்படுகிறது. இதனை பத்து மடங்காக உயர்த்தி ரூபாய் 8000 ஆக வழங்கப்பட வேண்டும், என்றார்.

67-வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யா பேசுகையில், தற்போது உள்ள அண்ணா சிலை அருகில் தந்தை பெரியார் சிலையும், கலைஞர் கருணாநிதி சிலையும் அமைத்துத் தரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

26 வது வார்டு மதிமுக கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி பேசுகையில்,

பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு முடிவு பெறாமல் உள்ளது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை மேடாக உள்ளது. 40 தூய்மைப் பணியாளர்களில் 23 தூய்மைப் பணியாளர் தான் வேலைக்கு வருகிறார்கள். இதனால் குப்பைகள் தேங்கி உள்ளது. 25க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் துரு பிடித்து கீழே விழுந்து அப்பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளது எனவே தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும், என்றார்.

63 வது வார்டு திமுக கவுன்சிலர் சாந்தி முருகன் பேசுகையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும். கோவையில் சென்னையில் உள்ளது போல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட வேண்டும், என்றார்.

71வது வார்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் அழகு ஜெயபாலன் பேசுகையில், ஆர் எஸ் புரம் பகுதியில் மழைநீர் வடிகால் சுத்தமாகவே இல்லை. ஸ்மார்ட்சிட்டி பணிகளின்போது வடிகால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்கி மழை பெய்ய தொடங்கி விட்டது. மழைநீர் வடிகால் இல்லாமல் மிகப்பெரிய அளவில் மக்கள் அவதியடைவார்கள். தடாகம் சாலையில் கண்டிப்பாக மேம்பாலம் கட்டப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை தடுக்க தடாகம் சாலையில் கண்டிப்பாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்வது போல் முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். சிறுவாணி குடிநீருக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் அந்த சாலைகள் சீரமைக்க படாமலேயே உள்ளது. எனவே உடனடியாக குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், என்றார்.

கல்விக்குழு தலைவர் மாலதி பேசுகையில், வஉசி பூங்கா கோவை மாநகரின் ஒரே ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக உள்ளது. இந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளது. தற்போது பள்ளி விடுமுறையில் உள்ளது. குழந்தைகள் அதிகளவில் விளையாட வருகின்றனர். எனவே விளையாட்டு உபகரணங்கள் உடனடியாக புதுப்பித்து தரவேண்டும்.

வஉசி உயிரியல் பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? அந்த உரிமையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இது கோவை மாநகரின் பெருமை என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய வஉசி உயிரியல் இயக்குனர் செந்தில் நாதன் பேசுகையில், அதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பார்வையாளர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறை எடுத்து நடத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதற்கு இதுவரை எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இடம், நிதியாதாரம், திட்ட அறிக்கை போன்றவைகள் இருந்தால் புதிய வஉசி உயிரியல் பூங்கா அமைக்கப் படலாம். இந்த உயிரியல் பூங்காவை நாம் தக்க வைத்துக்கொள்ளலாம். இதற்கு பொறியாளர்கள் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா இதற்கு பதிலளித்துப் பேசுகையில், வஉசி பூங்கா முழுமையாக புதுப்பித்துத் தரப்படும். பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும், என்றார்.

மாமன்ற கூட்டத்தின் நிறைவாக 64 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க