January 28, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில், இடஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 60,74,80,87,93 ஆகிய வார்டுகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட ஆண்கள், பெண்கள் போட்டியிடலாம். 3,13,61,66,85 ஆகிய வார்டுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1,2,9,14,15,17,19,21, 25,26,27,28,29,30,36, 37,38,39,40,41,43,44, 45,48,49,50, 51,54,57, 58,59,62,63,64,65,67,68,70,75,77,78,79,82,83,84 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் மொத்தம் 50 வார்டுகள் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.5 வார்டுகள் பிற்படுத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 45 வார்டுகள் பொதுப்பிரிவு ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.