August 1, 2022 தண்டோரா குழு
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம்
சுந்தரம்வீதி CTDகாலனியில் சுமார் 80 வீடுகளில் தூய்மை பணியை பிரதானமாக செய்துவரும் பட்டியல் இன மக்கள் வாழ்ந்து வந்தனர்.
அந்த மக்களுக்கு சுமார் 80 வீடுகள்
ஒதுக்கீடு செய்து கடந்த 6.11.2019 ஆம் தேதி அன்று டோக்கன் மற்றும் வீடு ஒதுக்கீடு ஆணையங்கள் வழங்கப்பட்டது. வீடு ஒதுக்கீடு செய்வதற்கு கட்டணமாக ரூ.1,00,000
செலுத்த வேண்டும் என்று ஒதுக்கிவிட்டு ஆணையத்தில்குறிப்பிடப்பட்ட இருந்ததாக
சுமார் 50 குடும்பங்கள் அந்த
ஒரு லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால், தற்போது வீடு வழங்காமல் ஒதுக்கீட்டு ஆணை (ALLOTMENT ORDER ) செல்லாது என கூறி மக்களை ஏமாற்ற குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி அறிவுறுத்தலின் படி இன்று பா.ஜ.க கோவை மாநகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஜெ.சி.விவேக் தலைமையில் மாநில பட்டியல் அணி செயற்குழு உறுப்பினர் வி.ஜோதி மற்றும் மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் மற்றும் ஆர்எஸ் புரம் மண்டல் தலைவர் சிபிகவிதா ஆகியோர் முன்னிலையில் பாதிக்கபட்ட மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது
இதில் மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.