January 16, 2023 தண்டோரா குழு
கோவை மாநகர போலீஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
இந்த மாரத்தானானது அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கி.மீ. நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், துணை கமிஷனர் சிலம்பரசன் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் பாலக்காடு ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து கோவைப்புதூர் பிரிவு வரை நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா சாலை பாதுகாப்பு குறித்த பேசினார்.
அதனை தொடர்ந்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.இதில் குனியமுத்தூர் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உக்கடம் போலீசார் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர போலீஸ் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.