• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

November 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று சப்- கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்1519419 பெண் வாக்காளர்கள்1564628 மூன்றாம் பாலினத்தவர்கள் 518 என மொத்தம் 3084565 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக 8798 ஆண், 9116 பெண், மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 15476 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பார்வையிடலாம். இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பங்கள் இந்த மாதம் 30-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

இந்த மாதம் 13, 14, 27 மற்றும் 28-ந் தேதி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பதிவு நீக்கம் செய்ய படிவம் 7, ஏற்கனவே உள்ள பதிவில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8ஏ படிவம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மனுக்களை பதிவேற்றம் செய்யலாம்.

மேலும் படிக்க