September 24, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கி கொள்வதாக,” மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர சமீரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
கோவையில் கடந்த 12,19ம் தேதிகளில் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில், 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. எனவே, கோவை மாவட்டத்திற்கு பிரத்யேகமாக ஞாயிற்றுகிழமை அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகிறது.மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள்,தியேட்டர், டாஸ்மாக், மார்க்கெட்கள்,ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடம், உடற்பயிற்சி கூடம், தனியார் கேளிக்கை விடுதி பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை கண்காணிக்கவேண்டும். கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்துக்குள் வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும். மொத்த விற்பனை மார்கெட்டுகளில் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது.சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை.
பொள்ளாச்சி மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு,அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.