• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் மூலம் 5.83 கோடி பேர் பயணம்

May 23, 2022 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளதையடுத்து கோவை மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் கடைகோடி மக்களும் சென்று சேரும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 235மனுக்கள் பெறப்பட்டு 1 லட்சத்து 13 ஆயிரத்து 601 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 33 ஆயிரத்து 588 நபர்களுக்கு பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 659 பேர் துரிதமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவசமின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 3448-விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இல்லம் தேடிகல்வித் திட்டத்தின் மூலம் 6572 பெண் தன்னார்வலர்கள் மூலம் 96 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியர்கள் கல்வியறிவு பெற்று வருகின்றனர். புதிய வேளாண் காடுவளர்ப்புத் திட்டத்தின் மூலம் ரூ.51.54 லட்சம் மதிப்பீட்டில் 3430 விவசாயிகளுக்கு 34 ஆயிரத்து 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

நகர்புற வீடுகளில் காய்கறி உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் மூலம் 20 ஆயிரத்து 128 பயனாளிகளுக்கு காய்கறித்தோட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.வேளாண் உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2080 விவசாயிகளுக்கு ரூ.46.35 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

மகளிர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் மூலம் 5 கோடியே 83 லட்சத்து 3 ஆயிரத்து 802 மகளிர்கள் பேருந்துகளில் பயணம் சென்றுள்ளனர். கூட்டுறவுவங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 47ஆயிரத்து567 பயனாளிகளுக்கு ரூ.199.53 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் அறிவுரையின்படி மின்சாரத்துறை அமைச்சரின் சிறப்பு முயற்சியில் கோவை மாவட்டத்தில் மக்கள் சபை எனும் பொதுமக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.குறிப்பாக பொதுமக்களை அவர்கள் சார்ந்த பகுதிகளிலேயே நேரடியாக சென்று கேட்டறிந்து கொள்ளும் வகையில் கோவை மாநகராட்சியின் 100-வார்டுகளுக்கும், 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 50-இடங்கள் என 150 இடங்கள் கண்டறியப்பட்டு கடந்த 30.10.2021 முதல் 21.11.2021 வரை மக்கள் சபை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இம்மக்கள் சபை முகாம்களில் வருவாய்துறை, மின்சார வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், மாவட்ட சமூகநலத்துறை உள்ளிட்ட அனைத்த துறைகளுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 680 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 77 ஆயிரத்து 297-மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு அவர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 40 ஆயிரத்து 383 மனுக்கள் மேல்நடவடிக்கைக்காக பரிசீலனையில் உள்ளது.

கோவை மாவட்டத்தில் 99.6 சதவிகிதம் நபர்கள் முதல் தடுப்பூசியும், 90 சதவீதம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்துகொண்ட மாவட்டமாக உள்ளது.
இதுபோல் அனைத்துதுறைகளிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க