August 6, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது,
33 வது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1530 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 340 முகாம்களும், நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பிணை உடனடியாக பயன்படுத்திக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் கடந்த 5ம் தேதி வரை முதல்தவனை 32 லட்சத்து 31 ஆயிரத்து 698 பேருக்கும், இரண்டாம் தவணை 27 லட்சத்து 44 ஆயிரத்து 762 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 1 லட்சத்து 84 ஆயிரத்து 524 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.