• Download mobile app
04 Jan 2025, SaturdayEdition - 3251
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் சாலை விபத்தில் 687 உயிரிழப்பு

January 1, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த 2024 ஆண்டில் பதிவான வழக்குகளின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.

கொலை வழக்குகள்

கோவை மாவட்டத்தில் பதிவான 38 கொலை ( கடந்த ஆண்டை விட 20% குறைவு) வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.குண்டர் தடுப்பு சட்டம் பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுத்தி வந்த 20 நபர்கள்,தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 18 நபர்கள்,தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 31 நபர்கள், சட்ட ஒழுங்கு வழக்கு நபர்கள் 09 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்புடைய 05 நபர்கள் என மொத்தம் 73 குற்றவாளிகள் ( கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகம் ) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாலை விபத்துக்கள்

2598 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் 660 வழக்குகளில் 687 பேர் உயிரிழந்துள்ளனர்.(கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைவு)மேலும், விபத்துகளை தவிர்க்க 3,11,214 மோட்டர் வாகன வழக்குகள் (கடந்த ஆண்டை விட 4 சதவீதம் அதிகம் ) பதிவு செய்யப்பட்டு ரூ .3,28,68,000 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

குடிபோதையில் வாகனம் ஒட்டிய நபர்கள் மீது 5392 வழக்குகள் (கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்) பதிவு செய்யப்பட்டு ரூ .72,90,000 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குட்கா வழக்குகள்

954 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 984 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ .79,87,319 / – மதிப்புள்ள 9810.872 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் ( கடந்த ஆண்டை விட 33 சதவீதம் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 723 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு ரூ .1,80,75,000 / – அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .மேலும் குற்றவாளிகளின் 48 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டடுள்ளது.

லாட்டரி வழக்குகள்

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 845 குற்றவாளிகள் மீது 817 வழக்குகள் ( கடந்த ஆண்டை விட 70 சதவீதம் அதிகம் ) பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ .24,93,000 / – மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் , 7 வாகனங்கள் மற்றும் ரூ.2,25,72,860 / – பணம் ( கடந்த ஆண்டை விட 54 மடங்கு அதிகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் கருமத்தம்பட்டி காவல்நிலைய எல்லையில் லாட்டரி வியாபாரியிடம் இருந்து மட்டும் ரூ 2,22,77,000 / – கைப்பற்றப்பட்டுள்ளது.

அடிதடி தொடர்பான வழக்குகள்

380 அடிதடி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 620 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்குகள் 372 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 477 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ 1,84980 / – மதிப்புள்ள 441.963 கிலோ கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.17,65,350 / – மதிப்புள்ள செயற்கை போதை பொருட்களும் , கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 29 வாகனங்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுவிலக்கு வழக்குகள்

4030 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 4138 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 10,026.325 லிட்டர் ( 47,640 மது பாட்டில்கள் ) மதுபானங்கள் , 16174.70 லிட்டர்கள்,4500 லிட்டர் எரிசாராயம் , ஊரல் 225 லிட்டர்,31 விட்டர் சாராயம், ரூ .1,90,555 / – பணம் மற்றும் 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூதாட்ட வழக்குகள்

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1547 குற்றவாளிகள் மீது 288 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ .28,23135 /- பணம் மற்றும் 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகள் பதிவான 534 திருட்டு வழக்குகளில் 392 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 639 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 497 சவரன் தங்க நகைகள், 95 இருசக்கர வாகனங்கள் 06 நான்கு வாகனங்கள், மற்றும் ரூ .1,25,38,110 /- பணம் என மொத்தம் ரூ 3,48,36,630 /- மதிப்புள்ள திருட்டு சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

93 % சதவீதம் கடுங்குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்ற வழக்குகள்

குழந்தைகளுக்கு எதிராக 262 பாலியல் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 287 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் 249 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 27 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டள்ளது.பிடியானைகள் 1435 பிடியானைகள் பெறப்பட்டு 1341 வழக்குகளில் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு பிடியானை வழங்கப்பட்டது.

சைபர் குற்ற வழக்குகள்

2749 ONLINE மோசடி மனுக்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்டது . இதில் 137 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் 15 குற்றவாளிகளை கைது செய்தும் ரூ 15,26,58,585 / – பணம் வங்கி கணக்குகளில் முடக்கப்பட்டும் ரூ .2,22,82,359 / – பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . 919 பணி மோசடி அல்லாத மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 06 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

பண மோசடி வழக்குகள்

1007 பண மோசடி மனுக்கள் மாவட்ட குற்றப்பிரிவில் பெறப்பட்டு,38 குற்றவாளிகளை கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 30.5 சவரன் தங்க நகைகள் , 05 வாகனங்கள்,மற்றும் ரூ .10,76,00,000 /- பணம் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சரித்திர பதிவேடு / கெட்ட நடத்தைகாரர்கள் 61 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.1093 கெட்ட நடத்தைகாரர் மனு விசாரணை பொது மக்களிடம் மூலம் 20806 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18811 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

2024 – செல்போன்கள் ஒப்படைப்பு

கடந்த காலங்களில் கோவை மாவட்டத்தில் களவு போன சுமார் ரூ 1,37,15,000 / – மதிப்பிலான 756 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க