• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வை 5400 பேர் எழுதுகிறார்கள்

July 17, 2022 தண்டோரா குழு

கோவையில் 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற் கான நீட் என்ற நுழைவுத்தேர்வு மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தாமதமாக நடந்தது. நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.கோவை மாவட்டத்தில் நீட் தேர்வை 5400 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதில் கோவை சவுரி பாளையம் கேந்திரிய வித்யாலயா பள்ளி கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி – ஆதித்யா கல்லூரி – ரத்னவேல் சுப்பிரமணியம் கல்லூரி – கற்பகம் அகாடமி உள்ளிட்ட மையங்களில் தேர்வு எழுதுகினரனர்.

கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குவதால் தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் மாணவ -மாணவிகள் அனுமதிக் கப்படுவார்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரப்படி தேர்வு அறைக்கு வர வேண்டும். புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட், அரசு வழங்கிய அடை யாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் கிருமிநாசினி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவை கொண்டுவர வேண்டும்.

மேலும் தேர்வு மையத்துக்குள் மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பறக்கும் படை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மேலும் படிக்க