March 7, 2022 தண்டோரா குழு
கந்து வட்டி கொடுமையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளான இன்று தங்களது பிரச்சனைகளை மனு மூலம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில் அசம்பாவித்தை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு சோதனைக்கு பின்னரே அலுவலகத்தில் அனுமதிக்கப்படுவர்.
தொடர்ந்து மனு அளிக்க வந்த கோவை போத்தனூரை சேர்ந்த ராஷ்மி,செல்வம் தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.வழக்கம் போல் சோதனை செய்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராஷ்மி கூறுகையில் எனது அம்மாவான தமிழ்ச்செல்வி கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
தனது அம்மாவின் பெயரில் உள்ள காலிமனையிட பத்திரம் மற்றும் வெற்று வங்கி காசோலை ஆகியவற்றை வைத்துக்கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பமிட்டு பணம் பறிக்க முயற்சி செய்வதாகவும்,அந்த நபர்களிடம் இருந்து தன்னையும் தனது அம்மாவையும் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.