• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

August 6, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக ஏ.ஜே.கே.,கல்லுாரியின் செயலாளர் அஜித்குமார் லால் மோகன் பெறுப்பேற்றார்.

கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் மருதுபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சங்க தலைவர் அஜித்குமார் லால் மோகன், துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், ராமாசாமி, ஜேசுதாசன், ஆனந்த் கிருஷ்ணன்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சந்திர குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் சிவ சண்முகம், சரவணன், செந்தில்பிரபு, வெஸ்லி ராஜ்குமார், ஆனந்தன், செல்வசிங், குனசிங் மற்றும் ரவிகுமார் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சங்கத்தின் தலைவர் அஜித்குமார் லால் மோகன் கூறுகையில்,

” கோயம்புத்தூர் கால்பந்து சங்கத்தின் 25வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 16 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் கால்பந்து கழகம் அனைத்து கிளப்புகளுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து விளையாட்டு போட்டியை விரைவில் நடத்த உள்ளது.

பெண்களுக்கான கால்பந்து போட்டியும் விரைவில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து அரசின் பங்களிப்பை கேட்க உள்ளோம். மேலும், கால்பந்துக்கு கோவையை ஒரு மையமாக மாற்ற கோரிக்கை விடுக்க உள்ளோம்.” என்றார்.

மேலும் படிக்க