January 13, 2025 தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
“தமிழர் திருநாளாம் பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இன்று (13.01.2025) நடைபெற்ற பொங்கல் விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், குடும்பத்துடன் கலந்து கொண்டு, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்தும் மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மதத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். இச்சமத்துவ பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக காவல்துறையை சார்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியாக வயது வாரியாக 50 மீட்டர்,100 மீட்டர் ஓட்டம்,கோலப்போட்டி, மியூச்சிக்கல் சேர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவ்விழாவில் கோவை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள்.