• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட தொழில் மையம் முதலிடம்

July 6, 2023 தண்டோரா குழு

மாநில அளவில் தொழில் துறையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துதலில் கோவை மாவட்ட தொழில் மையம் முதலிடம் பெற்றுள்ளது.இதற்காக தமிழக அரசு சார்பில் கோவை மாவட்ட தொழில் மையத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கோவையில் உள்ள 22 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன் மற்றும் அவரது குழுவினருக்கு நேற்று மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது.போசியா ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் உள்ளிட்டோர் விழாவிற்கு தலைமை வகித்தனர்.

விழாவில் போசியா நிர்வாகிகள் பேசுகையில்,

கோவை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மிகவும் வெளிப்படை தன்மையுடன் செயல்படுபவர். நல்ல ஆபிசர் கிடைத்துள்ளார்.தொழில் துறையினர் உபயோகம் படுத்திக்கொள்ள வேண்டும். மானியம் மற்றும் தொழில் துறையில் உள்ள திட்டங்கள் குறித்த சந்தேகங்கள், மற்றும் வேலை நிமித்தமாக எப்போது போனில் அழைத்தாலும் பேசுவார்.தொழிற்கடலில் முத்து எடுத்த பெருமை இவருக்கு உள்ளது. குறுந்தொழில் முனைவோர்களுக்கு சிறப்பான வழிகாட்டி,” என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் திருமுருகன் பேசுகையில்,

” இந்நிகழ்ச்சி தொழில் குடும்பத்தின் நிகழ்வாக உள்ளது.அமைச்சரிடம் விருது வாங்கிய சந்தோஷம் அதை உங்களுடன் இவ்விழாவில் பகிர்ந்தது எனக்கும் எங்கள் குழுவிற்க்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த விருது கோவைக்கு கிடைக்க எங்களுடைய டீம் தான் இதற்கு காரணம்.ஒருதிட்டம் குறிப்பிட ஒரு பகுதிக்கு மட்டும் போகக்கூடாது.எல்லாருக்கும் செல்ல வேண்டும்.பெண்கள், மைனாரிட்டி சமூகத்தினர், மாற்றுத்திறனாளி என அனைவருக்கும் செல்ல வேண்டும். அதில் உறுதியாக இருந்தோம்.மாநிலத்தில் முதலிடம் பிடித்தோம்.

ஆபிஸ் போனால் வேலை நடக்கும் என்ற நம்பிக்கையை அளித்தோம்.இடைத்தரகர்கள் இன்றி எங்களை அனுக முடியும். ஹல்ப் டெஸ்க் மூலம் வருபவர்களுக்கு வழிகாட்டினோம். கோவையில் சிறு, குறுந்தொழில்களுக்கு உதவும் வகையில் மூலப்பொருள் வங்கி அமைக்க அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளோம்,” என்றார். இந்த நிகழ்ச்சியில் 22 தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க