February 17, 2022 தண்டோரா குழு
கோவை சட்டமன்ற சிங்காநல்லூர்
தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ஆரோக்கிய சாமி திடலில் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி,
கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன். போன முறை எல்லா இடத்திலும் நடந்த பிரச்சாரத்தில் நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். ஆனாலும் , கோவையில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியதா நிலையை ஏற்படுத்தி கவுத்தீட்டீங்கள் என தெரிவித்தார். இந்த 9 மாதத்தில் 10 கோடி தடுப்பூசி போட்டு விழுப்புணர்வு ஏற்படுத்தி இருக்கின்றோம். இந்த 3 வது அலையை தமிழ்நாடு பாதிப்பு இல்லாமல் கடக்க காரணம் தடுப்பூசி ஊசி செலுத்தியதுதான்.
தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாளப் பணிகள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். சிங்கநல்லூர் தொகுதி உழவர் சந்தை அருகில் உள்ள பழுதடைந்த 1000 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சிங்கநல்லூர் தொகுதி வார்ட் எண் 26, 27 பயன்படும் வகையில் பீளமேடு ரயில்வே சுரங்க பாதை அமைத்து தரப்படும்.
திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட SISH காலனி ரயில்வே மேப்பாள பணி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வரின் எட்டு மாத ஆட்சியில் ரூபாய் 30 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து மாமன்ற உறுப்பினராக்க வேண்டும்.இந்த பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சி வட்டாரங்களில் மேயர் வேட்பாளராக கருதப்படும் இலக்குமி இலஞ்செல்வி கார்த்திக் உள்ளிட்ட அனைத்து திமுக கூட்டணி சிங்காநல்லூர்தொகுதி வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.