September 10, 2021 தண்டோரா குழு
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள் கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசி 6 -வது முகாம் 2 -வது நாள் நடைபெற்றது. 750 பயனாளர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் பி. ஆர். அருள்மொழி தலைமை தாங்கினார்.செயலாளர் கே. கலையரசன், பொருளாளர் டி.ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர் திருஞானசம்பந்தம், இணைச்செயலாளர் ரீனா, ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் பரமசிவம்,முபினா, தங்கராஜ், உதயக்குமார்,ரமேஷ், வைகலாநிதி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.கொரோனா தடுப்பூசி முகாமிற்கு வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர், குமாஸ்தாக்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒரு நாளைக்கு 750 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெறும் வரும்பொழுது ஆதார் அடையாள அட்டையுடன் வரக்கூடிய நீதிமன்ற ஊழியர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.