January 25, 2022 தண்டோரா குழு
கோவை வஉசி மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின கொடியேற்று விழா கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் விமர்சியாக நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு நாளை நடக்கும் குடியரசு விழாவில் போலீஸ் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்குகிறார்.
போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் ஆட்சியர் ஏற்றுக்கொள்வார் விழா நெருங்கி வரும் நிலையில் மாநகர போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம் போல் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 2000 பேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.