March 14, 2022 தண்டோரா குழு
கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29-ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் கூறியிருப்பதாவது:
கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் இயக்க இயலாத நிலையிலும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளது. போக்குவரத்து கமிஷனர் சுற்றறிக்கையின்படி இந்த வாகனங்களை திறந்த வெளி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 16-ம் தேதி முதல் கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் 24-ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை தொகை
ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலையாக இணைத்து 25-ம் தேதி மாலை 4 மணிக்குள் கோவை வடக்கு வட்டாரப போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
நடப்பு ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் வழங்கப்படும். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் மட்டும் 16ம் முதல் 25ம் தேதி வரை அலுவலகத்தில் நேரடியாக பார்வையிடலாம். துடியலூரிலுள்ள கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 29-ம் தேதி காலை 11 மணிக்கு திறந்தவெளி பொது ஏலம் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.