September 2, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வரும் மையத்தை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.
பின்னர் மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்களா? என பார்வையிட்டார்.
தொடர்ந்து அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டார்.பின்னர் பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.