December 30, 2021 தண்டோரா குழு
புல்லட் ராணி என அழைக்கப்படும் ஆசிரியை ராஜலட்சுமி மாண்டா தேசிய ஒற்றுமை,பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி டில்லியிலிருந்து கேரளா வரை பெண்கள் மேலாண்மை விழிப்புணர்வு யாத்திரையை துவக்கினார்.11 மாநிலங்கள் வழியாக 12 நாட்கள் சுமார் 4200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்து கேரளாவில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ள இவர், கோவை வந்தார்.கோவை நவக்கரை பகுதிக்கு வந்த ராஜலட்சுமி மாண்டா குழுவினருக்கு நம்ம நவக்கரை மகேஷ் தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
நவக்கரை ஏ டூ பி ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதற்கான விழாவில், லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா மாநில துணைதலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக தேசிய தலைவர் ஸ்ரீ குருஜி,தேசிய செயலாளர் ராம்சந்திரா ரெட்டி,ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில்,நவக்கரை நவீன் பிரபஞ்ச குழுவினர் அசத்தலாக ஒயில் கும்மியாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பேசிய ஆசிரியை ராஜலட்சுமி மாண்டா,
மத்திய அரசு பெண்களின் திருமண வயது வரம்பை 21 ஆக உயர்த்தியதை தாம் வரவேற்பதாகவும்,இதனால் பெண்களுக்கு கூடுதலான சுதந்திரம் கிடைத்துள்ளதாகவும், ,இதனால் பெண்கள் தங்களது கல்வி,வேலைவாய்ப்புகளை பெற கூடுதல் நேரங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் பெண்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
விழாவில் மதுக்கரை ஒன்றிய முன்னால் தலைவர் சண்முக சுந்தரம்,மாவுத்தம்பதி ஊராட்சி தலைவர் கோமதி செந்தில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.