December 10, 2021 தண்டோரா குழு
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கர்நாடகா மாநிலம் யெலஹங்கா, ஆந்திர மாநிலம் பெனுகொண்டா பகுதிகளில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வருகின்ற 12 ஆம் தேதி ராஜ்கோட்டில் புறப்பட்டு 13 ஆம் தேதி கோவை வந்தடையும் சிறப்பு ரயில் ( எண்: 16613) குண்டக்கல், தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், குண்டக்கல், ரேனிகுண்டா, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.
12 தேதி லோக்மான்யா திலக் நிலையத்தில் புறப்பட்டு, 13 ஆம் தேதி கோவை வந்தடையும் விரைவு ரயில்( எண்: 11013) குண்டக்கல், தர்மாவரம், பெங்களூரு, ஹூசூர், தர்மபுரி, சேலம் ஆகிய வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், குண்டக்கல், கடப்பா, ரேனிகுண்டா, ஜோலார்பேட்டை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.