December 21, 2021 தண்டோரா குழு
கோவை வழித்தடத்தில் மேற்கு வங்காளம் நியூஜல்பாய்குரி – திருவனந்தபுரம் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
டிசம்பர் 21, 28, ஜனவரி 4,11,18,25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் நியூ ஜல்பாய்குரி நிலையத்தில் மாலை 3.10 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்: 05706) வியாழக்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தைச் சென்றடையும். அதேபோல், டிசம்பர் 24, 31 ஜனவரி 7,14, 21, 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்( எண்:05705) திங்கள்கிழமை இரவு 12.10 மணிக்கு நியூ ஜல்பாய்குரி நிலையத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள், கிஷாங்கஜ், மால்டா டவுன், ராம்பூர், பர்தமான், தங்குனி, காரக்பூர், பாலாசோர், பட்ராக், கட்டாக், புவனேஷ்வர், குர்டா சாலை, பெர்ஹாம்பூர், பாலஷா, ஸ்ரீகாகுளம் சாலை, விழியன்காரம், சாமல்கோட், ராஜமுந்திரி, ஏழூரு, விஜயவாடா, நெல்லூர், ரேனிகுண்டா, காட்பாடி,சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனூர், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.