• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு ; கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

May 15, 2017 தண்டோரா குழு

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் சின்னியம்பாளையம் பகுதி மக்களை பாதிக்காதவாறு நடைபெற வேண்டும் இல்லையெனில் வேறுபகுதியில் விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என சின்னியம்பாளையம் கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை சர்வேதச விமான நிலையத்தில் பல சர்வதேச விமானங்கள் அதிக அளவு வந்து செல்லும் வகையில் கடந்த 2௦1௦-ம் ஆண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன.

இதன் காரணமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவைகளை விட்டு வேறு எங்கு செல்வது என தவித்து வந்த மக்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள். அதன் பின் விரிவாக்க பணிக்காக எடுத்துக்கொள்ள இடங்களுக்கு சந்தை மதிப்புப்படி நிவாரண தொகை அளிக்கவேண்டும் என மக்கள் போராடினார்கள்.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதில் வெற்றியும் அடைந்துள்ளனர். ஆனால் அதனை மாநில அரசு அமல்படுத்தாமல், மிக குறைந்த அளவே நிவாரண தொகை மட்டுமே அளிப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவுள்ளதாக மக்கள் கூறினார்கள்.

இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் இன்று காலை கிராமசபா கூட்டத்தை கூட்டி தலைவர் முன்னிலையில் விமான நிலைய விரிவாக்க பணிகள் சின்னியம்பாளையம் பகுதி மக்களை பாதிக்காதவாறு நடைபெற வேண்டும் இல்லையெனில் வேறுபகுதியில் விரிவாக்க பணியை மேற்கொள்ள வேண்டும் என கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த தீர்மானம் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடமும் இன்று அவர்கள் மனு அளித்தனர். மேலும் அப்பகுதிமக்கள் கூறுகையில் “சந்தை மதிப்பில் நிலங்களுக்கு நிவராண தொகை அளிக்கவேண்டும் இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுத்திக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க