April 20, 2022 தண்டோரா குழு
கோவை ஸ்டென்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவர்களும் பள்ளியின் அணித்தலைவர்களும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். இறைவழிபாட்டை ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ. பள்ளியின் உதவித் தலைமையாசிரியை ஜெனிட் ஜெயபிரகாஷ் நிகழ்த்தினார்.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் துணை முதல்வர் திவாகரன் வந்தாரை வரவேற்று வரவேற்புரை நல்கினார். பட்டொளி வீசிப் பறக்கும் வண்ணக் கொடியை பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜெ.பவுலர் ஏற்றினார். விளையாட்டு விழாவின் ஜோதியை பள்ளியின் பொருளாளர் சுஜித்தா இராமச்சந்திரன் ஒளிரச் செய்தார்.
பிறகு வளிக்கூடுகள் ( பலூன் ) வானில் பறக்கவிடப்பட்டன. இதனை தொடர்ந்து முப்பள்ளியின் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன . ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி சிறப்பு விருந்தினரைப் பற்றி அறிமுகவுரை வழங்கினார்கள். பள்ளித்தாளாளர் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
மனித உரிமைக் கழகத்திற்குப் பணிசெய்யும் மாட்சிமை தாங்கிய மூத்த வழக்கறிஞர் சுந்திர வடிவேலு விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் நல்லதொரு வாழ்த்துரையையும் மாணவர்களுக்கு வழங்கினார். பிறகு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் பதக்கங்களும் விருந்தினர்கரங்களால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஸ்டேன்ஸ் சகோதர பள்ளிகளின் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஊடகத் துறையினர் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின் நன்றி நவிலல் உரையை உடற்கல்வி ஆசிரியர் கிளேட்டன் அவர்கள் வழங்கினார். விழா நிகழ்வை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியை பிரியா சீன் ஒருங்கிணைத்தார்.