July 8, 2022 தண்டோரா குழு
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான அத்லெட்டிக் போட்டிகள் கோவையில் துவங்கியது..இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அத்லெட்டிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதன் படி நான்காவது ஆண்டாக, (Athletic Talent Find) அத்லெட்டிக் டேலண்ட் ஃபைண்ட் 2022எனும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதானத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது. அகாடமியின் துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் ஸ்ரீதர்,பொருளாளர் ஜோஸ்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு அரிமா சங்க முன்னால் ஆளுநர் சண்முகம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன்,கோவை மாவட்ட அத்லெட்டிக் சங்க செயலாளர் சம்சுதீன்,பொருளாளர் ஜான் சிங்கரராயர், தொழில் நுட்ப இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில்,19 வயதிற்கு கீழ் மற்றும் மேல் என இரண்டு பிரிவுகளில், 100 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம்,நீளம் தாண்டுதல்,உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல்,வட்டு எறிதல்,தொடர் ஓட்டம். உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை,திருச்சி,கோவை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தடகள வீரர்,வீராங்கனைகள் என பலர் கலந்து கொண்டனர்.