August 22, 2022 தண்டோரா குழு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியின் முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் உடல் எடை குறைவான குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாததால், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டியுடன் இணைந்து தாய்ப்பால் வங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் கோவை , திருப்பூர் , பொள்ளாச்சி , காரமடை,புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து தாய்ப்பால் தானம் பெறப்பட்டு , இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது .இதன்படி கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 250 குழந்தைகளுக்கு தாய்ப்பால் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெறப்படும் தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவதால், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதோடு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் கணிசமாக அதிகரிக்கிறது.இந்நிலையில் இந்த தாய்ப்பால் சேவை ஆரம்பித்து ஓரண்டுகள் முடிவடைந்த நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி முதலாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர்,ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜ்மோகன் நாயர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இதில் மாவட்ட பயிற்றுநர் மாதவ் சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில் எஸ்.என்.ஆர் . சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ராம்குமார், மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுகுமாரன் , ரோட்டரி சங்க நிர்வாகிகள் மயில்சாமி , சுமித்குமார் பிரசாத் , ராகேஷ்குமார் ரங்கா , நிரவ் சேத் , டாக்டர் நீதிகா பிரபு , கிருஷ்ணா டி.சமந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.