• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஹாஷ் 6 ஹோட்டல்ஸில் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா

November 6, 2021 தண்டோரா குழு

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹாஷ் 6 ஹோட்டலில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்களுக்கான மூலப் பொருள்கள் கலக்கும் திருவிழா
நடைபெற்றது.

கேக் தயாரிக்கும் கலவையுடன் தேங்காய், முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்டாச்சியோ பழங்கள், ஆரஞ்சு தோலுரித்தல், கறுப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புகள் ஆகியவை சேர்க்கப்படும். இந்தக் கலவையை விழாவில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்த கலவைகளை கலக்க வேண்டும். இவற்றுடன் விஸ்கி, ரம், ஓட்கா, ஜின், பீர் போன்ற மதுக்களும் தங்கப் பாகு, வெல்லப்பாகு, தேன் மற்றும் வெண்ணிலா சாரம் போன்றவற்றை கலந்து இந்த கேக் கலவையை 200 கிலோ எடை வரும் வரை கலந்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட, அனைவரும் தலைமை சமையல் கலைஞர்களை போல உடையும், தலைப்பாகையும் அணிந்து இருந்தனர். விழாவின் போது, இவர்கள் அனைவரும் கேக்கள் செய்வதற்காக மூலப் பொருள்களை சரியான விகிதத்தில் கலந்தார்கள்.

இந்தக் கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் அடைத்து வைத்து, கேக் தயாரிக்கப்படும். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நடைபெறும் கேக் கலவை கலக்கும் திருவிழாவில் பங்கேற்போருக்கு அது மறக்க முடியாத சிறப்பாக நிகழ்வாக இருக்கும் என்று கூறினால், அது மிகையாகாது.இந்த விழாவிற்கு ஹாஷ் 6 ஹோட்டலின் தலைமை செப் ராஜா தலைமை வகித்து, கேக் கலவை கலக்கும் விழாவை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து கோவை ஹாஷ் 6 ஹோட்டல் பொது மேலாளர் கார்த்திகேயன் கூறுகையில்,

கிறிஸ்துமஸ் விழாவிற்காக கேக் கலக்கும் விழாவானது உலகெங்கும் நடைபெறும் பாரம்பரிய திருவிழா கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த விழாவை எங்களின் ஹாஷ் 6 கோயம்புத்தூர் ஹோட்டலில் நடத்துவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். விழாவில் பங்கேற்பவர்கள் அனைவரும் மகழ்ச்சி அடைவர் என நம்புகிறோம் என்றார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3201, சிறப்பு குழந்தைகள் நலம் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். லீமா ரோஸ் மார்டின், கலந்து கொண்டார். மேலும் விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அக்ருதி சங்க உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஹாஷ் 6 ஹோட்டலை சேர்ந்த 26 செப்கள், ஹோட்டல் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க