February 7, 2022 தண்டோரா குழு
அதிமுக ஆட்சியில் செய்துகொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் , கடந்த 8 மாத காலமாக பராமரிப்பு பணிகள் செய்யமால் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைப்பதாக அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி 38வது வார்டு அதிமுக வேட்பளாரக சர்மிளா சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்திரா நகர் பகுதியில் காலை 7 மணிக்கு பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது பொதுமக்களின் அடிப்படை வசதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், குடிநீர் சரிவராமல் இருப்பதாக அதிமுக வேட்பாளரிடம் குற்றாச்சாட்டு வைத்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரிவர செய்து கொடுத்துள்ளோம். ஆனால் கடந்த 7, 8 மாதங்களாக பராமரிப்பு பணிகள்கூட நடக்கவில்லை எனவும் வெற்றி பெற்றவுடன் விடுபட்ட பணிகளை செய்து கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் தெரிவித்தார்.