• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை 80வது வார்டில் தனி நபராக மழைநீர் சேகரிப்பு தொட்டியை கட்டிய நபர்!

October 20, 2023 தண்டோரா குழு

மழை நீர் சேகரிப்பு என்பது நாளைய உலகிற்கு மிகவும் தேவையானது. மழைநீர் உயிர் நீர் ஒவ்வொரு நாளும் நீரின் தேவை அதிகரித்து வருகிறது.ஆகையால் நீரினை சேகரிக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும்,பல்வேறு தனியார் அமைப்புகளும், தனி நபர்களும் தங்கள் பங்கிற்கு மழை நீர் சேகரிப்பு அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,கோவை மாநகராட்சிக்குப்பட்ட 80வது வட்டத்தில் வசிக்கும் ச.இராம கிருஷ்ணன் என்பவர் பாலாஜி ஆவின்யூ பார்க்கில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பணியை தனது சொந்த முயற்சியில் மாநகராட்சி யின் அனுமதியுடன் இதனை அமைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

முதலில் 11அடி நிலத்தினை தோண்டி அதில் சிமெண்டு உறைகள் இறக்கி முதல் கட்டமைப்பு அமைக்கப்பட்டது. அதன்பின் ஒரு அடுக்கு கருங்கற்களால் நிரப்பப்பட்டு
அதில் ஜல்லியிட்டு நிரப்ப வேண்டும்.அதற்கு பிறகு செங்கல்தூள் போட வேண்டும். அதற்கு மேலே கரித்தூள் போட வேண்டும். இவை அனைத்தும் செய்யும் போது நீர் நன்னிராகி பூமியில் சேர்ந்து பூமியின் நீர் மட்டத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த கட்டமைப்பிற்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலவானது.இந்த பணியை அனைத்தும் மாநகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவித்து அதற்கு ஒப்புதல் பெற்றுள்ளேன் என்றார்.

மேலும் படிக்க