March 11, 2022 தண்டோரா குழு
KGiSL கல்வி நிறுவனம் மாணவர்களின் செயல்திறனை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தி ஊக்குவிப்பதில் என்றுமே தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில் மாணவர்களிடையே Artificial Intelligence | Machine Learning திறன்களை மேம்படுத்தி அவற்றை செயல்படுத்தும் வகையில் ஒரு கற்றல் அனுபவத்தை உருவாக்குவதே AWS DeepRacer முயற்சியின் நோக்கம் ஆகும். இந்த அனுபவம் மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும் உலகளாவிய போட்டித்திறன் கொண்ட பொறியியல் துறையில் அவர்களை ஊக்குவிக்கவும் பயனுள்ள வகையில் கேஜி குழுமம் Deep Racer லீக்கை மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் கேஜி வளாகத்தில் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்வினை KGiSL கல்வி நிறுவன நிறுவனர் முனைவர் அசோக் பக்தவச்சலம் DEEPRACER லீக் மற்றும் AL ML கண்காட்சியை துவக்கி வைத்தார். கேஜி மருத்துவமனையின் நிறுவனர் பத்மஸ்ரீ Dr.பக்தவத்சலம் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தார்.
KGiSL கல்வி நிறுவனங்களின் Innovation Director M. நவநீத் Deep தொகுத்துரைத்தார். இந்நிகழ்வின் Racer ALML கண்காட்சி குறித்த கருத்துக்களை பின், அரை இறுதியின் சோதனை நடத்தப்பட்டது. முதல் நாள் கண்காட்சி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.