December 27, 2022
தண்டோரா குழு
இயக்குனர் வினோ இயக்கி நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை வசுதா கிருஷ்ணமூர்த்தி நடித்து க்ரைம் த்ரில்லர் படமாக வெளியாகி உள்ள புராஜெக்ட் சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனாவிற்கு பிறகு திரைப்படத்துறை பெரும் எழுச்சி பெற்று வருகிறது.முன்னனி தயாரிப்பாளர் நடிகர்களின் படம் என்றில்லாமல் சிறிய பட்ஜெட் படங்கள் ,அறிமுக இயக்குனர்கள்,நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களும் அதிகம் சாதித்து வருகின்றன.அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள க்ரைம் த்ரில்லர் படமான புராஜெக்ட் சி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சார்க் ஃபின் ஸ்டுடியோ தயாரிப்பில் வினோ இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படத்தை கோவையில் சர்வா பிலிம்ஸ் வெளியிட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ நடிகை வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ்,ராம்ஜி என அளவான நடிகர்களை கொண்டு சிறந்த க்ரைம் படமாக உருவாக்கி உள்ள இப்படத்தில் தொழில் நுட்ப கலைஞர்களும் அவரவர் சிறந்த பணியை செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் ஆனந்த். பின்னணி இசையில் சிபு சுகுமாரன் என இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் கவனம் பெறுகின்றனர். கோவை காஸ்மோ சினிமாஸ் இல் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருவது குறிப்பிடதக்கது.