• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை – ஜெயக்குமார்

October 3, 2017 தண்டோரா குழு

சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தனது கணவர் நடராஜனின் உடல்நலக் குறைவை காரணம் காட்டி 15 நாட்கள் விடுவிக்க வேண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டி.டி.வி.தினகரன் மீது சட்டத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய அரசு பெரும்பான்மையுடன் இருப்பதாகவும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் தி.மு.கவுக்குள் ஸ்டாலினுக்கு இருக்கின்ற பெரும்பான்மை குறைந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
மேலும், சசிகலா பரோலில் வருவதால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க